News August 26, 2024
சீமானுக்கு திருச்சி எஸ்பி பதிலடி

திருவாரூரில் நேற்று சீமான் பேசிய பேச்சுக்கு, திருச்சி எஸ்பி வருண்குமார் இன்று பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமுமோ? திரள் நிதியிலோ பிச்சை எடுத்ததிலோ வந்த பதவி அல்ல. சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என பதிலடி கொடுத்துள்ளார். SHAREIT
Similar News
News December 28, 2025
திருச்சி வழியாக புதிய ரயில் அறிவிப்பு

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக பனாரஸ் சிறப்பு விரைவு ரயில் வரும் 30ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது ராமேஸ்வரத்திலிருந்து 30 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் வழியாக பனாரஸ் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 28, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
8. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
திருச்சி: மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நசுருதீன் (24), அசார் முகமது (26), ரவுடி உதுமான் அலி (23) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


