News August 26, 2024
அப்போதுதான் அமைச்சரவை மாற்றம்?

செந்தில் பாலாஜி (S.B) ஜாமினில் வந்ததும் அமைச்சரவை மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. CM ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பு அமைச்சரவை மாற்றப்படலாம் என செய்தி வெளியானபடி இருந்தது. ஆனால் பணமோசடி வழக்கில் கைதான S.B. ஜாமின் கிடைத்து வெளிவந்தபிறகு அமைச்சரவையை மாற்றலாம், அதுவரை முடிவை தள்ளிவைக்கலாம் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 28, 2025
புதுவை: அமைச்சருடன் உணவு உட்கொண்ட முதல்வர்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோருடன் இணைந்து முதல்வர் வீட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமிகள் ஆலயத்துக்கு சென்று , பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் அன்னதானம் உட்கொண்டார். தொடர்ந்து, மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர், முதலமைச்சர் அவர்களை சந்தித்தார்.
News December 28, 2025
ராசி பலன்கள் (28.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 28, 2025
அசாமில் 10.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

அசாமில் SIR பணிக்கு பிறகு இன்று ECI வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதில், இறந்தவர்கள், குடியேறியவர்கள் மற்றும் நகல் வாக்காளர்கள் என 10,56,291 பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரியில் வெளியிடப்படும்.


