News August 26, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; தம்பதி கைது

image

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ராஜா(46). இவர், இவரது மனைவி பத்மா & செங்கோட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக தனித்தனி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாரிமுத்து ராஜா, பத்மாவை நேற்று(ஆக.,25) போலீசார் கைது செய்தனர். சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி

image

தென்காசி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT

News November 15, 2025

குற்றாலம் அருவியில் குறைந்தளவு தண்ணீர்

image

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை தற்போது நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்னொரு பகுதியாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சனிக்கிழமை குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டிவருகிறது.

News November 15, 2025

தென்காசி: மகன் பேசாததால் தாய் தற்கொலை

image

கடையம், சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. இவரது தாய் சந்திராவுக்கு (55) பக்க வாத நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிபி சக்கரவர்த்தி புதிய வீடு கட்டுவது தொடர்பான பிரச்சனையில் தாயிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மகன் பேசாததால் மன வேதனையில் இருந்த சந்திரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!