News August 26, 2024

ஆற்காட்டில் 2.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி ஆணையர் நகராட்சி ஆணையர் வெங்கட் லட்சுமணன் தலைமையில் அதிகாரிகள் ஆற்காடு பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2.5 டன் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

Similar News

News March 4, 2026

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பே. சிபின் இன்று (மார்ச் -04) பொறுப்பேற்றுக் கொண்டார். ​பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 4, 2026

ராணிப்பேட்டை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலையில் பயங்கர விபத்து!

image

வி.சி மோட்டூர் பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலையில் இன்று(மார்ச் 4) கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி ஏழுமலை, சாந்தகுமார், ரமேஷ், இக்பால் ஆகிய 4 பேர் மயங்கி விழுந்தனர்.
​பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!