News August 26, 2024
பாஜகவுக்கு பாடம் புகட்ட கூட்டணி சேர தயார்: முஃப்தி

காஷ்மீரில் காங்கிரஸ் – JKNC கூட்டணிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக PDP தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதே தனக்கு மிக முக்கியம் என்றும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த பாஜகவுக்கு பாடம் புகட்டவும், மண்ணின் மக்களின் கண்ணியத்தை காக்கவும் PDPஇன் திட்டங்களை ஏற்றால், அவர்களுடன் இணைந்து நிற்க தயார் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
BREAKING: 14 மாவட்டங்களில் இன்று கனமழை

கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை(அக்.24) கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
2045-ல் விண்வெளியில் வசிப்போம்: ஜெப் பெசோஸ்

இன்னும் 20 வருஷம் தான். நாம் எல்லாரும் விண்வெளியில் வீடு கட்டிவிடுவோம் என்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். 2045-க்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என்று கணிக்கும் பெசோஸ், நிலவு மற்றும் பிற கோள்களில் ரோபோக்கள் வேலை செய்வார்கள் என்றும் கூறுகிறார். AI வேலைகளை பறிக்காது என்றும், அது சமூகத்திற்கு அதிக செழிப்பையே கொடுக்கும் எனவும் ஜெப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
BREAKING: இந்திய அணி 264 ரன்கள் குவிப்பு!

ஆஸி.,க்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264/9 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ரோஹித் 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்களும், அக்சர் படேல் 44 ரன்களும் அடித்து அவுட்டாகினர். ஆஸி., அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களையும், பார்ட்லெட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த ஸ்கோரை Defend செய்து வெற்றி பெறுமா இந்தியா?