News August 26, 2024
வாடிவாசல் பட பணிகள் தொடங்கியதா?

‘வாடிவாசல்’ படம் வருமா, வராத என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பாளர் தாணு கருத்து தெரிவித்துள்ளார். விடுதலை 2-ஐ முடித்துவிட்டு வெற்றிமாறனும், S44 படத்தை முடித்துவிட்டு சூர்யாவும் வாடிவாசல் படத்தில் பணியாற்றவுள்ளதாக தெளிவுபடுத்திய அவர், ‘ஜூராஸிக் பார்க்’ படத்திற்கு CGI வொர்க் செய்த ILM நிறுவனம், வாடிவாசலுக்கான முன்னோட்ட அனிமேஷன் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
Similar News
News March 8, 2026
தமிழக தேர்தல்: ECI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வரும் 15 (அ) 16-ம் தேதிகளில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ₹40 லட்சத்துக்கும் மேல் செலவழித்தால், ஊழலாக கருதப்படும் என்று ECI எச்சரித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
News March 8, 2026
USA, இஸ்ரேலுக்கு புதிய செக்

பிப்.28-ம் தேதி இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியில் <<19292495>>165 மாணவிகள்<<>> பலியாகினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தாக்குதலை போர் குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் 165 மாணவிகள் பலியான இத்தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
News March 8, 2026
CPM-ம், பாஜகவும் ஒரே கட்சிதான்: ராகுல் காந்தி

கேரளாவில் CPM மற்றும் BJP என்பது தனித்தனி கட்சிகள் அல்ல. CJP என்ற ஒரே கட்சியாக அவை செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸை வீழ்த்துவதே CJP கட்சியின் முக்கிய நோக்கம் என்ற அவர், CPM விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவில்லை என பேசியுள்ளார். மேலும், ட்ரம்பின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதைப் போலவே, மோடியின் கட்டுப்பாட்டில் பினராயி விஜயன் உள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.


