News August 26, 2024
குமரி மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கேரள மீனவர்கள்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.
Similar News
News March 10, 2026
குமரி: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

குமரி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
குமரி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News March 10, 2026
குமரி: ரூ.2.10 கோடி நகை மோசடி

வடசேரியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.2.10 கோடி வரை மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் இருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது சில நகைகள் போலி என தெரிய வந்தது. போலி நகைகள் என தெரிய வந்ததையடுத்து நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் மீது போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் ரகுவரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


