News August 26, 2024
US ஓபன் இன்று தொடக்கம்: பரிசுத்தொகை எவ்வளவு?

US ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடங்கி, செப். 8 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ₹629 கோடி. இது கடந்த ஆண்டை விட 15% அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ₹30 கோடியும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ₹6.25 கோடியும் அளிக்கப்படும். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்கள் 2,5 ஒளிபரப்புகின்றன.
Similar News
News July 6, 2025
டெஸ்ட் வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?

2-வது டெஸ்டில் இங்கிலாந்து 608 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இங்கிலாந்துக்கு தனது பேட்டிங்கை தொடங்கிவிட்டது. ஆனால் இங்கிலாந்து இந்த இலக்கை எட்ட முடியுமா? இதற்கு முன்னதாக 2003-ம் ஆண்டு அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 418 ரன்களை சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?
News July 6, 2025
வெற்றிப் பாதையில் இந்தியா!

2-வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய வீரர்கள் ராகுல்(55), ரிஷப் பண்ட்(65), ஜடேஜா(69) அரைசதம் அடித்தனர். கேப்டன் கில்(161) சதம் அடித்து அணிக்கு தூணாக நின்றார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
News July 6, 2025
ராசி பலன்கள் (06.07.2025)

➤ மேஷம் – கவனம் ➤ ரிஷபம் – நஷ்டம் ➤ மிதுனம் – சுகம் ➤ கடகம் – தேர்ச்சி ➤ சிம்மம் – கவலை ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – லாபம் ➤ விருச்சிகம் – அமைதி ➤ தனுசு – விவேகம் ➤ மகரம் – வரவு ➤ கும்பம் – முயற்சி ➤ மீனம் – நன்மை.