News August 26, 2024
கூடலூரில் கனரக வாகனங்கள் இயக்க தடை

கூடலூர் நகரில் மாணவர்கள் பள்ளி வந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் பள்ளி, கல்லூரி செயல்படும் நாட்களில் காலை 8.30 முதல் 9.30 மணி வரை கன ரக வாகனங்கள் இயக்க போலீஸார் தடை விதித்து உள்ளனர்.
Similar News
News March 3, 2026
நீலகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு! CLICK & APPLY

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 3, 2026
BREAKING நீலகிரிக்கு முதல்வர் அறிவித்தார்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என அதில் இடம் பெற்றுள்ளது.
News March 3, 2026
கூடலூர் தொகுதியில் வேட்பாளர் இவரா ?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூடலூர் தொகுதியில் போட்டியிட கூடலூர் நகரமன்றத் தலைவர் ச.பரிமளா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் விருப்பமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் போட்டியிட திமுகவின் ராஜேந்திரனும் விருப்பமனு அளித்துள்ளதால், வேட்பாளர் தேர்விலேயே இப்போதே கூடலூர் தேர்தல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.


