News August 26, 2024

ஓசூர் நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி

image

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கோர விபத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் பேருந்துகள் என அடுத்தடுத்து 13 வாகனங்கள் மீது மோதியது. இதில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Similar News

News March 8, 2026

கிருஷ்ணகிரி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

கிருஷ்ணகிரி: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 8, 2026

கிருஷ்ணகிரி: கட்சித் தாவிய 300 பேர்

image

காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியம், பண்ணிஅள்ளி ஊராட்சியில், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சபரி மற்றும் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன் ஏற்பாட்டில், நேற்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், மாவட்ட கழக செயலாளர் மதியழகன் MLA முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்துக் கொண்டனர்.

error: Content is protected !!