News August 26, 2024
ரேஷன் பொருள் தட்டுப்பாடுக்கு 90% தீர்வு: முத்துசாமி

ரேஷன் பொருள் தட்டுப்பாடு பிரச்னைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் எனக்கூறிய அவர், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடையின்றி பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். கடந்த 3 மாதங்களாக ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 20, 2025
குளிர்கால பாதிப்புகளை சமாளிக்க உதவும் ராகு கஞ்சி!

குளிர்காலம் வந்தாலே சளி தொடங்கி பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அத்தவகை உணவுகளில் ராகி கஞ்சி முதலிடத்தில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறை ராகி கூழ் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் சூடாக இருக்கவும் அது உதவுகிறது. Share it
News December 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 555 ▶குறள்:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
▶பொருள்: கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
News December 20, 2025
இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

U19 ஆசிய கோப்பையில் அரையிறுதியில் இலங்கையை தோற்கடித்து இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றிலேயே பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இந்தியா கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.


