News August 26, 2024
Indian Railways தான் டாப்பு

உலகளவில் மிகப்பெரிய பசுமை ரயில்வே நெட்வொர்க்காக, இந்திய ரயில்வே மாறியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் சரண்மாத்தூர் கூறும்போது, நாட்டிலுள்ள 68,000 KM ரயில் பாதைகளில் 95% மின்சாரமயமாகியுள்ளது என்றார். இதன்மூலம் இந்திய ,ரயில்வே மிகப்பெரிய பசுமை ரயில்வே நெட்வொர்க் ஆகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பங்கள் மூலம் ரயில் விபத்துகளை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
தவெக கூட்டணியில் இருந்தும் போட்டியில்லையா?

இதுவரை விஜய்யை நம்பி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் முஸ்தபாவும் ஆக்டிவ்வாக தவெகவுக்காக பல விவாத மேடைகளில் கலந்துகொண்டு வருகிறார். இதனால் விஜய்யிடமும் அவருக்கு நன்மதிப்பு இருக்கிறதாம். ஆனால், முஸ்தபாவோ வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் காட்டவில்லை என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தவெக தனித்து களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
News March 4, 2026
சிலரின் தோல்விகளை மறைக்கவே போர்: ஸ்பெயின்

போர் வேண்டாம் என்ற நிலைபாட்டில் ஸ்பெயின் அரசும், மக்களும் உள்ளதாக அந்நாட்டின் PM பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். <<19293932>>ஸ்பெயின் உடனான வர்த்தக உறவை துண்டிப்பதாக டிரம்ப்<<>> அறிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய பெட்ரோ, ஈரான் மீதான போர் மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரழிவிற்கான தொடக்கம் என்றும், சில அதிபர்கள் தங்கள் தோல்விகளை மறைக்க போரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் டிரம்ப்பை விமர்சித்துள்ளார்.
News March 4, 2026
சூடு சொரணை இல்லாத காங்கிரஸார்: விஜயதரணி

காங்கிரஸில் இன்று 99% பேர் திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். சூடு சொரணை இல்லாத 1% பேர்தான் திமுக அரசிடம் சில பல சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் என சாடியுள்ளார். 23 வருடமாக தன் இளமை காலத்தையெல்லாம் காங்கிரஸில் செலவு செய்ததாகவும், மக்கள் பணி செய்ய நினைத்தபோது இடையூறு தந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.


