News August 26, 2024
திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கீழப்பாவூர் பகுதியில் கருணாகரன் மற்றும் கணபதி என்பவர் வீட்டில் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் மதுரையை சேர்ந்த கணேசன் (39), கீழப்பாவூர்சங்கரராமன் (36), தஞ்சாவூர் ரமேஷ் (42), கோவை செந்தில்குமார் (50) ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 157 கிராம் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணம் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News August 13, 2025
தென்காசி: மமக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி 15வது வார்டு கிளை பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடந்தது. இதில் நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை வகித்து, நகர செயலாளர், பொருளாளர் மற்றும் நகர துணை அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
News August 13, 2025
தென்காசி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

தென்காசி மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த <
News August 13, 2025
தென்காசி: இங்கெல்லாம் இன்று மின்தடை

தென்காசி மாவட்டத்தில் இன்று (ஆக.13) பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணி அவுங்க பணிகளை வேகமாக முடிக்க சொல்லுங்க!