News August 26, 2024

கடலூரில் தேசிய கண்தான விழிப்புணர்வு

image

கடலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனம், கடலூர் சார்பில் 39-வது தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு முகாம் இன்று முதல் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இது தொடர்பான விளம்பர பேனர்கள் மருத்துவமனை வாயிலில் இன்று இரவு வைக்கப்பட்டது.

Similar News

News March 22, 2026

கடலூர்: மாதம் 30,000 சம்பாதிக்க மானியம்!

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

News March 22, 2026

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 22, 2026

வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அமைச்சர்

image

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இதில், குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்திருந்த வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.

error: Content is protected !!