News August 26, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
▶பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
Similar News
News December 27, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது இந்த நாடு தான்!

சட்டவிரோத குடியேற்றம், முறையான அனுமதியின்றி பணிபுரிதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல காரணங்களால் பிறநாடுகளில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். 2025-ல், 81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், முதலிடத்தில் சவுதி அரேபியாவும் (11,000 பேர்), 2-வது இடத்தில் USA-வும் (3,800 பேர்) உள்ளன.
News December 27, 2025
ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. புதிய அப்டேட்

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரொக்கமும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2.20 கோடி ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாம். இதனால் விரைவில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


