News August 25, 2024
தனுஷ் படத்தில் Cameoவாக பிரியங்கா மோகன்

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இயக்கும் இப்படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” விரைவில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் புது போஸ்டரை வெளியிட்டுள்ள தனுஷ், Cameoவாக நடித்ததற்காக பிரியங்கா மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்திற்கு GVP இசையமைத்துள்ளார்.
Similar News
News October 21, 2025
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு இங்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மாவட்ட வாரியாக விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 21, 2025
குளிர்காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க..

குளிர்காலத்தில் முகம் வறட்சியாக காணப்படும். இதனை தவிர்த்து, முகத்தை பளபளப்பாக மாற்ற சிம்பிளான வழிகள் இருக்கிறன. ➤சருமத்தில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். ➤அதற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்துங்கள் ➤குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிடுங்கள் ➤வாரத்திற்கு ஒருமுறை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி ஊறவைக்கலாம். SHARE பண்ணுங்க.
News October 21, 2025
Cinema Roundup: போர் வீரனாக நடிக்கும் பிரபாஸ்

*விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பைசன்’ படத்தை தொடர்ந்து ‘டாடா’ கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல். *பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் வரும் 23-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. * மிர்ச்சி சிவாவின் ‘தமிழ் படம்’ 3-ம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.