News August 25, 2024
வேலூரில் காவல்துறை இரவு ரோந்து பணி காவலர்கள்

வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு (ஆகஸ்ட் 25) ரோந்து பணி செல்லும் காவல்துறை அதிகாரிகளின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் காவல் ஆய்வாளர் வாசுகி தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்- 9498160655.
Similar News
News August 21, 2025
விஐடி பல்கலை.யுடன் இணைந்த முன்னணி நிறுவனம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஐஎம் நியோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஆக.20) கையெழுத்தானது. விஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தலைமை வகித்தார், செயல் இயக்குநர் சந்தியாபென்ட ரெட்டி, துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
News August 21, 2025
வேலூர் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) கண்காட்சி :

வேலூர் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான உடல்கூறியல் கல்வி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சிஎம்சி உடல்கூறியல் துறை சார்பில் அறிவியல் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி ஆகஸ்ட் 22 வரை நடைபெறும். உதவும் உள்ளங்கள் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார் .
News August 21, 2025
இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க