News August 25, 2024
ஆட்ட நாயகனின் அசத்தல் செயல்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற முஷ்பிகுர் ரஹீம், பரிசு தொகையை வங்தேச மக்களுக்கு வழங்கவுள்ளார். பாக்., எதிராக முதல் டெஸ்டில் 191 ரன்கள் குவித்து வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்ட அவர், ஆட்ட நாயகனுக்காக கொடுக்கப்பட்ட தொகையை வங்கதேசத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளதாக கூறினார். இவரின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Similar News
News November 5, 2025
நவம்பர் 5: வரலாற்றில் இன்று

*1870–சுதந்திர போராட்ட தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள். *1888-தமிழ் இலக்கிய வரலாற்றை முதலில் எழுதிய அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்தநாள். *1930–மருத்துவர் பூ.பழனியப்பன் பிறந்தநாள். *1952–எழுத்தாளர் வந்தனா சிவா பிறந்தநாள். *2013–செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. *2007–ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியீடு.
News November 5, 2025
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு: OPS

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்வதாக OPS விமர்சித்துள்ளார். கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், திமுக அரசு காவல்துறையை செயலிழக்க வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 5, 2025
சர்ச்சை சமிக்ஞை.. பாக்.வீரருக்கு ஐசிசி தடை

ஆசிய கோப்பையில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதமும், 2 தகுதி இழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சர்ச்சை சமிக்ஞை காட்டிய ஹாரிஸ் ராஃப்-க்கு மொத்தமாக 4 தகுதி இழப்பு புள்ளிகளுடன் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


