News August 25, 2024

விநாயகர் சதுர்த்தியில் 1008 சிலைகள் வைக்க தீர்மானம்

image

மேலூரில் அகில பாரத இந்து மகா சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேலூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில விவசாய அணி தலைவர் ரமேஷ் பாண்டியன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் பெரி. செல்லத்துரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலூர் தாலுகாவில் ஒரு அடி முதல் ஒன்பதரை அடி வரை 1008 விநாயகர் சிலைகள் வைப்பது என்பது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News March 5, 2026

மதுரை: குறுக்கே வந்த நாய்; பறிபோன உயிர்

image

குலமங்கலத்தை சேர்ந்த சேக்அமீர்(49) இன்று கோசாகுளம் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வர அதன் மீது மோதினார். படுகாயத்துடன் வீட்டிற்கு சென்ற அவருக்கு கிராம மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் மயக்கம் அடைய, மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை.

News March 5, 2026

மதுரை: இளைஞர் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

சக்கிமங்கலம் அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மன அழுத்தத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை கோடாங்கி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் விசாரணை.

News March 5, 2026

மதுரை மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

error: Content is protected !!