News August 25, 2024

சிறந்த முதலீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

image

பணவீக்கத்தை தாண்டிய ரிட்டர்ன் தரும் முதலீடு சிறந்த முதலீடு என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சராசரி பணவீக்கம் 7% வரை இருக்கிறது. அப்படியானால், 7%க்கு அதிகமாக ரிட்டர்ன் தரும் முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும். சராசரியாக FD 6 – 8%, தங்கம் 8 – 9%, Bonds 8 – 10%, Mutual Fund 13 – 14%, Share 14 – 15% ரிட்டர்ன் தரும் என்கிறார்கள். இதில் உங்களது தேர்வு எது என்பதை கமெண்ட் செய்யுங்க.

Similar News

News March 12, 2026

ரஜினியை மிரட்டியது திமுக: ஆதவ் அர்ஜுனா

image

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு திமுகவே காரணம் என ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக விடுத்த மிரட்டலால் தான் ரஜினி மனவலிமை இழந்து பின்வாங்கியதாக குறிப்பிட்ட அவர், விஜய் திமுகவை எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.

News March 12, 2026

சங்கீதா விவாகரத்தில் திருப்பம்: விஜய்க்கு அடுத்த ஷாக்

image

விஜய்க்கு எதிராக விவாகரத்து மனு தாக்கல் செய்த சங்கீதா, நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்குமாறு புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இது அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு நெருக்கடியை கொடுத்தது. இந்நிலையில், விஜய்யின் சொத்துகள் தொடர்பாக சங்கீதா மேலும் ஒரு வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அவரது முடிவுகள் விஜய் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

News March 12, 2026

Cricketer of the Year விருது பெறும் சுப்மன் கில்!

image

டெஸ்ட் & ODI கேப்டன் சுப்மன் கில்லுக்கு, ‘Cricketer of the Year’ விருதை BCCI வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2025-ல் சர்வதேச கிரிக்கெட்டில் 35-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ள கில், 1764 ரன்களை குவித்துள்ளார். T20 WC-க்கான அணியில் இடம் கிடைக்காத நிலையிலும், இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் 15-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

error: Content is protected !!