News August 25, 2024

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 வட்டார அளவிலான முகாம்களில் 3464 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 1765 பேருக்கு அடையாள அட்டைகள், 1124 பேருக்கு யூடிஐடி அடையாள அட்டைகள், 194 பேருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, 126 பேருக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று ரூபாய் 9.30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

ராணிப்பேட்டையில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீஸில் குவிந்த மனுக்கள்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். இதில், 590 மனுக்கள் பெறப்பட்டன. 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 5.58 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News March 3, 2026

ஆற்காடு எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு

image

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜே.எல். ஈஸ்வரப்பன், 2026 தேர்தலில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார். இவர் 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!