News August 25, 2024
விஜய் உடன் நடனமாடிய த்ரிஷா?

‘G.O.A.T’ படத்தின் ஸ்பெஷல் சாங் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், செப்.5ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளோடு திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், விஜய், த்ரிஷா இணைந்து நடனமாடிய சாங் சர்ப்ரைஸாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 26, 2025
CM நிகழ்ச்சிக்காக பனைகள் வெட்டப்பட்டதா? Fact Check

தென்காசியில் CM நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், TN அரசின் தகவல் சரிபார்ப்பகம் இது தவறான செய்தி என்று தெரிவித்துள்ளது. 2 தனிநபர்கள் தங்களின் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனைகளை, உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரசாணை 238-ன் படி, ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில் 40 பனைகளை வளர்க்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News October 26, 2025
மாதம் ₹4,000 உதவித்தொகை!

TN அரசின் <<17712443>>’அன்புக்கரங்கள்’<<>> திட்டம் போல் மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ திட்டம் உள்ளது. இதன் மூலம் தாய் (அ) தந்தை (அ) இருவரும் இல்லாத 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் அடிப்படை தேவைகள், கல்விக்காக மாதந்தோறும் ₹4,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.missionvatsalya.wcd.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 26, 2025
BREAKING: வேகமாக வருகிறது புயல்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் Montha புயலாக மாறும் என்று IMD கணித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 790 கிமீ தொலைவில் புயல் சின்னம் இருக்கிறது. மேலும், 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னம், திடீர் திருப்பமாக 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர தொடங்கியுள்ளது.


