News August 25, 2024
பாக்.கை விட்டு 1 கோடி பேர் வெளியேறினர்.. ஏன் தெரியுமா?

பாகிஸ்தானை விட்டு 17 ஆண்டுகளில் 1 கோடி பேர் வெளியேறி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல்ஸ் கன்சல்டன்ட் என்ற அமைப்பின் ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் நல்ல வேலை தேடி 1 கோடி பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாகவும், இதில் பிஎம்எல்-என் கட்சி ஆட்சிகாலமான 2015-18இல் அதிகம் பேர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
திமுக மூத்த தலைவர் அய்யாவு காலமானார்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதலே Ex CM அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். #RIP
News July 5, 2025
மாத சம்பளதாரர்களுக்கு… PF கணக்கில் வட்டி டெபாசிட்

PF கணக்கு வைத்திருக்கும் மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை EPFO வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வட்டித் தொகையை அது செலுத்தியுள்ளது. PF தொகைக்கு 8.25% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. 31/03/2025 தேதி வரைக்குமான வட்டி, உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது பாஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் PF-க்கான வட்டி டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா… உடனே செக் பண்ணுங்க.
News July 5, 2025
சுட்டெரிக்கும் வெயில்.. கவனம் தேவை மக்களே!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ள போதும், பிற மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. மதுரை, மீனம்பாக்கம், நாகை, திருச்சி, வேலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. இந்நிலையில், வரும் நாள்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!