News August 25, 2024
நீதிக்காக காத்திருக்கும் சதீஷ்

‘சட்டம் என் கையில்’ திரைப்படம் செப்.20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை தொடர்ந்து, சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, த்ரில்லர் ஜானரில் சச்சி இயக்கியுள்ளார். கையில் Gun உடன் சதீஷ் அமர்ந்திருக்கும் மிரட்டலான போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. காமெடியன்கள் கதாநாயகர்களாக மாறி வரும் தற்போதைய ட்ரெண்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
Similar News
News August 20, 2025
பயந்து ஓடிய நேதாஜி..? பாடப்புத்தகத்தால் சர்ச்சை

ஆங்கிலேயர்களுக்கு பயந்து நேதாஜி ஜெர்மனிக்கு தப்பி ஓடியதாக, கேரள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்த வரலாற்று பிழை இடம்பெற்றதாகவும், இதை அறிந்த உடன், பிழையை நீக்க உடனே உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். உண்மையில், ஆங்கிலேயரை விரட்டவே ஜெர்மன் சென்று ஹிட்லர் உதவியை நேதாஜி நாடினார்.
News August 20, 2025
தர்பார் தோல்விக்கு இதுதான் காரணம்: ARM ஓபன்டாக்

‘தர்பார்’ கதையை மிக சீக்கிரமாக எழுதியது அப்படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். முதலில் அப்பா – மகள் கதையாக இருந்ததாகவும், நயன்தாரா படத்திற்குள் வந்தவுடன் கதையின் போக்கு முற்றிலுமாக மாறியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
விரைவில் ஜெர்மனி செல்லும் CM ஸ்டாலின்

ஐரோப்பாவிலும் TN Rising மாநாட்டை நடத்தவுள்ளதால், CM ஸ்டாலின் ஜெர்மனி செல்ல உள்ளார் எனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் TRB.ராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர், 2024 முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% வரை அமலுக்கு கொண்டு வந்து திமுக அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.