News August 25, 2024

50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணி ஆணை

image

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றி கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு , 411 பேர் கருணை அடிப்படையில் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

Similar News

News August 22, 2025

BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் இன்று (ஆக.22) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமான என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News August 22, 2025

வந்தாரை வாழ வைக்கும் நம்ம சென்னை!

image

மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு 1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆக.22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அப்பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என ஒவ்வொரு பெயர்கள் மாறினாலும், இன்று வரை சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.

News August 22, 2025

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (22.08.2025) திருவொற்றியூர் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட், வளசரவாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 11 மண்டலங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

error: Content is protected !!