News August 25, 2024

தமிழக அரசின் சாதனை விளக்கும் புகைப்பட கண்காட்சி

image

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 25) மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 6, 2026

வேலூர்: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

வேலூர் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

வேலூர் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

வேலூரில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ள நிலையில், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் முக்கிய சிக்னல் பகுதிகளில் ‘பசுமை பந்தல்’ அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் இருப்பு வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது இடங்களில் குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்வும் கூறியுள்ளார்.

News March 6, 2026

வேலூர்: காதல் வலையில் சிக்கிய மாணவி; 7 மாதம் கர்ப்பம்!

image

அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவர் 18 வயது கல்லூரி மாணவி ஒருவரிடம் திருமணம் செய்வதாக கூறி தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக மாணவி கர்ப்பம் ஆகினார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!