News August 25, 2024
திமுக கூட்டணியில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை திமுக அரசு நடத்தி வருகிறது. இதற்கு கட்சிக்குள்ளே ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது கூட்டணியில் உள்ள CPM கே.பாலகிருஷ்ணன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மதத்திலிருந்து அரசு விலகி நிற்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை என்றும் எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 5, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

லீவு என்றாலே மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 (சனி) வேலைநாளாகும். இதேபோல், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு மார்ச் 10 உள்ளூர் விடுமுறையாகும்.
News March 5, 2026
சாமிக்கு ஓட்டு இல்லாததால் இப்படியா? கண்டித்த HC

கரூரில் உள்ள ஒரு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், சாமிகள் ஏழை என்பதாலும், வாக்குரிமை இல்லை என்பதாலும் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையா என மதுரை HC கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்பு செய்த வசதியானவர்களுக்கு வாக்குரிமை உள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையா என்றும் கேட்டுள்ளது.
News March 5, 2026
சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ₹100-க்கு 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கும் இதே நிலைமைதான். மேலும், பீட்ரூட்(கிலோ ₹30), உருளைக் கிழங்கு (கிலோ ₹15), சுரைக்காய் (கிலோ ₹35) உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளது. இதேபோல், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உங்க ஏரியாவில் விலை எப்படி இருக்கிறது?


