News August 25, 2024
வங்கிகளின் SMS இனி வராது?

டிராய் உத்தரவால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமெர்ஸ் நிறுவன SMS-கள் அடுத்த மாதம் முதல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மோசடியை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL, OTT லிங்குகள் கொண்ட SMS-களை செப்.1 முதல் தடுக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆக.31க்குள் மொபைல் நிறுவனங்களிடம் வங்கிகள், நிதிநிறுவனங்கள் பதிய வேண்டும். இல்லையேல் அதன் SMSகள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது.
Similar News
News July 7, 2025
இனி ஹாஸ்டல்கள் இல்லை ‘சமூகநீதி விடுதிகள்’

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News July 7, 2025
5 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடையை உடன் எடுத்துட்டு போங்க. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News July 7, 2025
கேப்டன்ஷிப் ரெக்கார்ட்… சாதனை படைத்த கில்!

ENG-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், கேப்டன் கில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெளிநாட்டில் இளம் வயதில் டெஸ்ட் போட்டியை வென்ற வீரர் என்ற பெருமையை கில்(25 ஆண்டுகள் 297 நாட்கள்) பெற்றார். இதற்கு முன்னர் கவாஸ்கர் (26 ஆண்டுகள் 198 நாட்கள்) இச்சாதனையை செய்திருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் தான் இந்தியாவின் பிரின்ஸ் என நிரூபித்து வருகிறார் கேப்டன் கில்.