News August 25, 2024
பாஜகவுடன் திமுக கூட்டணியா? கலாநிதி வீராசாமி பதில்

பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சி எம்பியும், அயலக அணித் தலைவருமான கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விருந்து, கருணாநிதி நாணய விழா ஆகியவற்றில் திமுக-பாஜக இடையே காணப்பட்ட இணக்கம், அக்கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைக்குமோ என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு அவர், பாஜகவுடன் கூட்டணி கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றார்.
Similar News
News March 10, 2026
விமானங்களில் நீல நிற சீட்கள்.. காரணம் தெரியுமா?

விமானப் பயணம் பொதுவாக பலருக்கும் பயம் தரக்கூடும். அந்த பயத்தை போக்கி பயணிகள் அமைதியாக உணர விமானங்களில் பெரும்பாலும் நீல நிற சீட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உளவியல் ஆய்வுகளின்படி, நீல நிறம் நம்பிக்கையும் அமைதியும் தரும் நிறமாகக் கருதப்படுகிறது. மேலும், விமானத்தின் உள்ளே வெப்பநிலை குளிராகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். அந்த சூழலில் நீல நிறம் பயணிகளுக்கு மனநிம்மதி மற்றும் சாந்தமான உணர்வை தர உதவுகிறது.
News March 10, 2026
PG-களில் டீ, காபி கேன்சல்

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, உணவகங்களுடன் கூடிய தங்கும் விடுதிகள் மற்றும் ஹாஸ்டல்களில் டீ, காபி விநியோகம் இருக்காது என்று TN விடுதிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல், சப்பாத்தி, தோசை வழங்கப்படாது. சாம்பார், குருமாவுக்கு பதில் சட்னி மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், side dish-க்கு பதில் வாரத்துக்கு 3 நாள் பப்ஸ்& முட்டை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
News March 10, 2026
NDA தொகுதிப் பங்கீடு.. பாஜகவுக்கு எத்தனை சீட்?

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு 29 சீட்களும், பாமகவுக்கு 18 சீட்களும், அமமுகவுக்கு 9 சீட்களும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 170 சீட்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில், கூட்டணிக்கு விஜய் வந்தால் அனைத்து கட்சிகளும் சில சீட்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டனவாம். இதுபற்றி மார்ச் 14-ல் அறிவிப்பு வரலாம்.


