News August 25, 2024
திருப்பூரில் 21 மாணவ, மாணவிகள் MBBS படிக்க தேர்வு

நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவ கவுன்சிலிங் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த 31 பேர் பங்கேற்றனர். இதில் 21 பேர் எம்பிபிஎஸ் படிக்கவும், ஆறு பேர் பல் மருத்துவம் படிக்கவும் கல்லூரிகளை நேற்று தேர்வு செய்தனர்.
Similar News
News March 10, 2026
திருப்பூர்: ஒரு Hi போதும்., உங்க வங்கி விபரங்கள் WhatsApp-ல்!

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News March 10, 2026
திருப்பூர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

திருப்பூர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
சிவன்மலை உத்தரவு பெட்டியில் என்ன பொருள் தெரியுமா?

காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவிடும் பொருட்கள் ‘ஆண்டவன் உத்தரவு’ பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் வழங்கிய உத்தரவின்படி, பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், அருகம்புல் மற்றும் வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


