News August 25, 2024

குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்த தம்பதி

image

தேனி ஜங்கால்பட்டியை சேர்ந்த அபிமன்னன், ராஜாமணி தம்பதியினர். இவர்கள் தனது மகன் அஜித்குமாருடன் வசித்து வருகின்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவர் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று (ஆக.24) பணம் கேட்டு நடந்த தகராறில் பெற்றோரை தாக்கினார். கோபமடைந்த பெற்றோர் மகனை மீண்டும் தாக்கியதில் சம்பவ இடத்திலே அஜித்குமார் பலியானார். வீரபாண்டி போலீசார் பெற்றோரை கைது செய்தனர்.

Similar News

News September 17, 2025

தேனி: மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்

image

மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் இன்று தேனி கம்மவார் சங்க தொழில்நுட்பகல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், சட்டம், தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். கடன் பெற விரும்பும் மாணவர்கள் முகாமிற்கு வந்து பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல். SHARE IT.

News September 16, 2025

தேனியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செப். 17ம் தேதி நடைபெறும் விவரங்கள். இதில், தேனி அல்லிநகரம் நகராட்சி 17, 18 வார்டுகளுக்கு மல்லிகை மஹாலில் முகாம், போடி நகராட்சி 11, 13 வார்டுக்கு சேது மறவர் திருமண மண்டபத்தில் முகாம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் வீரு நாகம்மாள் மண்டபத்தில் முகாம், பெரியகுளம் அருகே சருத்துபட்டியில் ஜெயமருதை மஹாலில் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

News September 16, 2025

தேனி: பட்டாவில் திருத்தமா?

image

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கபட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 04546-262112 அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!