News August 25, 2024
மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்!

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான போலி NCC பயிற்சியாளர் சிவராமன் & அவரது தந்தையின் மரணம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் குற்றத்தை சிவராமனால் தனியாக செய்திருக்க முடியாது என்றும் பின்னணியில் உள்ளவர்களை தப்ப வைக்க சதி ஏதேனும் நடந்துள்ளதா எனவும் எழும் ஐயங்களைத் தீர்த்து, உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
Similar News
News August 24, 2025
தேர்தல் ஆதரவு.. அதிமுகவுக்கு திருமாவளவன் கடிதம்

துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு கேட்டு ADMK MP-க்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து பாஜகவின் பிடியில் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஜெகதீப் தன்கரின் நிலைதான், நாளை தமிழகத்தை சேர்ந்த CP ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என ஆருடம் தெரிவித்தார். முன்னதாக, NDA-வின் CPR-க்கு TN MP-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என EPS வலியுறுத்தியிருந்தார்.
News August 24, 2025
நாளை மறுநாள் கடைசி.. சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

SBI வங்கிகளில் 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசிநாள். TN-ல் 380 பணியிடங்கள் உள்ளன. மாதம் ₹24,050 – ₹64,480 வரை சம்பளம் கொண்ட இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. ஆன்லைனில் முதல்நிலை, முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதலாம். மேலும் விவரங்களுக்கு <
News August 24, 2025
நாளை மிக கவனம்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை(ஆக.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 30-ம் தேதி வரை மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வேலை, கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் இருங்கள் நண்பர்களே..!