News August 25, 2024
அரசு பேருந்து மோதி பூசாரி உயிரிழப்பு

தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(62). இவர், அப்பகுதியிலுள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை, கோவிலில் பூஜை செய்துவிட்டு ஈ.சி.ஆர். சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. இதில், தாமோதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.
News August 17, 2025
ஆத்தூர் சுங்கச்சாவடியில் அனுமதி இலவசம்

தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்பும் மக்கள் ஒரே நேரத்தில் படையெடுத்ததால், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க, அங்குள்ள வாகனங்கள் கட்டணமின்றிச் செல்ல இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம் நெரிசல் குறைந்து, போக்குவரத்து சீராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
News August 17, 2025
செங்கல்பட்டு: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE