News August 25, 2024
தருமபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவலர்களுக்கு அறிவுரை

மேற்கு மண்டலத்திற்கு புதிதாக பொறுப்பேற்று கொண்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர் T.செந்தில்குமார் தருமபுரி மாவட்ட ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டு கவாத்து அணிவகுப்பை பார்வையிட்டு, காவலர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார். மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இதில் தருமபுரி எஸ்.பி உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News July 5, 2025
தர்மபுரி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவு ரோந்துப் பணிக்கான அலுவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A. சிவராமன் அவர்கள் இந்த இரவு ரோந்து பணிக்கு பொறுப்பாக உள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் காவல் நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்காக அனைத்து ரோந்து அலுவலர்களின் தொடர்பு எண்கள் உள்ளன.
News July 5, 2025
நாளை தருமபுரி வழியாக ரயில்கள் இயக்கப்படாது

ஒசூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாரநாயக்கனஹள்ளி ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நாளை ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரிலிருந்து வரும் 5 ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக சேலத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு பகிரவும்*
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே<