News August 25, 2024
மெட்ரோ ரயில் பணியால் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக மவுண்ட் பூந்தமல்லி ரோடு புகாரி ஹோட்டல் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்றுமுதல் 27ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.அதன்படி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். போரூரில் இருந்து கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்களுக்கு மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
சென்னை: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

சென்னை இளைஞர்களே, IT துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, J2EE, Web Designing, Testing என பல்வேறு Course-கள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு <
News August 9, 2025
சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்

சென்னையில், பேருந்து நிலையங்கள், சாலையோர ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350719>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.