News August 25, 2024
தென்காசி ரயில் பயணிகளின் புது கோரிக்கை

செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, செப்.,5, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டை- மைசூருக்கும், மறுமார்க்கமாக செப்.,4, 7 தேதிகளில் மைசூர்- செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்தது. இந்நிலையில், இதனை வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 24, 2025
தென்காசி: கவுன்சிலரின் கணவர் தீக்குளிக்க முயற்சி

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் நான்காவது வார்டு கவுன்சிலராக உள்ள நாகூர் மீரான் அவரின் வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் ஷேக் செய்யது ஒலி நேற்று தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் பாட்டிலை கைப்பற்றி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
News December 24, 2025
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!..

தென்காசி மாவட்டத்தில் முக்கிய ரயில்களின் விவரங்கள்: செங்கோட்டை, அம்பை, விருதுநகர் ஆகிய வழித்தடங்கள் வழியாக கொல்லம், பாலக்காடு, குருவாயூர், எர்னாகுளம், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, தாம்பரம், மயிலாடுதுறை, நாகை, மானாமதுரை, மேட்டுப்பாளையம், செக்கிந்திராபாத் செல்லக்கூடிய ரயில்களின் எண்கள், வருகை மற்றும் புறப்பாடு நேரம், நாட்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை SHARE செய்து உதவுங்க.
News December 24, 2025
தென்காசி: இனி உங்க பான் கார்டு செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


