News August 25, 2024
முதல்வர் கோப்பை SPORTS: அவகாசம் நீட்டிப்பு

முதல்-அமைச்சர் கோப்பை-2024 விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க, செப்.2 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த டிராபியில் கபடி, சிலம்பம் என 15 வகையான போட்டிகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News October 31, 2025
வான் ஆதிக்கத்தை பலப்படுத்த புதிய ஏவுகணைகள்

வான்வழி போர் திறன்களை வலுப்படுத்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரஃபேல் போர் விமானங்களை மேலும் பலப்படுத்த, சுமார் 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘Meteor’ ஏவுகணைகளை வாங்க முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தேஜஸ், சுகோய் Su-30 போன்ற இந்திய விமானங்களுக்கு, ‘அஸ்திரா மார்க் 2’ என்ற புதிய ஏவுகணைகளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
PM மோடிக்கு திமுக MP கனிமொழி சவால்!

திமுக அரசு பிஹார் மக்களை அவமதிப்பதாக PM மோடி பேசியது சர்ச்சையான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு TN வரும்போது, PM மோடி இதே கருத்தை சொல்லட்டும் என்று திமுக MP கனிமொழி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு தங்களை எப்படி வைத்துள்ளது என்று தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
News October 31, 2025
BREAKING: மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கம், கார்டு, UPI மூலம் MRP விலையில் மட்டுமே மது பாட்டில்களை விற்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.


