News August 25, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள், குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த தெரிவித்துள்ளார். ஏரி, குளங்களில் இருந்து மண் எடுப்பதை சிலா் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, ஏரிகளில் மண் வெட்டி எடுக்கப்பட்ட அளவு மீறாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அளவுகளுக்கு மீண்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: ஓடும் பேருந்தில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் இழப்பு!

image

திருக்கோவிலூர் அருகே வேலூர்-திருச்சி புறவழிச் சாலையில், நள்ளிரவில் சொகுசு பேருந்தில் தனது நண்பர்களுடன் பயணம் செய்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்திலியே உயிரிழந்தார். இதனை அறிந்த நண்பர்கள் அருகில் உள்ள திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News November 12, 2025

கள்ளக்குறிச்சியில் இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி!

image

கள்ளக்குறிச்சி இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘வீட்டு உபயோகப் பொருட்கள் எலக்ட்ரீசியன்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை!

image

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டலாம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை என போஸ்டர் ஒட்டி அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்தனர். இந்நிலையில் இன்று (நவ.12) கிராம இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!