News August 25, 2024

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

image

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு சுவற்றில் விளம்பர மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை நேற்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுவற்றை சுத்தப்படுத்தினர். இந்நிலையில் அந்த சுவற்றில் அரசின் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 27, 2025

நாமக்கல்: ஹோட்டலில் பிரச்னையா? WHAT’S APP பண்ணுங்க

image

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

குமாரபாளையம்: வெந்நீரால் போன கணவர் உயிர்!

image

குமாரபாளையத்தை சேர்ந்த தம்பதி உதயகுமார் (40), பிரியா (39). தம்பதியருக்கு சுமித்ரா, பவித்ரா என, இரு மகள்கள் உள்ளனர். கடந்த, 23, இரவு, கணவர் உதய குமார் குளிப்பதற்காக பிரியா வெந்நீர் வைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது கை தவறி, அங்கு உட்கார்ந்திருந்த உதயகுமார் மீது வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்து. நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!