News August 25, 2024

மகளிடம் அத்துமீறல்; தந்தை மீது வழக்கு

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது தொழிலாளி. இவர் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயதுடைய தனது மகளை இன்று மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காட்டுமன்னார்கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

கடலூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<> myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

கடலூர்: லஞ்சம் வாங்கிய காவலர் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி டிக்கெட், போதை பொருட்கள் போன்றவற்றை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் முதுநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை மற்றும் மாமூல் வாங்குவதற்கு துணை போனதாக எழுந்த புகாரில் சிக்கிய தனிப்பிரிவு போலீஸ்காரர் பாபு, கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

error: Content is protected !!