News August 25, 2024

மேலூரில் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம்

image

மதுரை மாவட்டம் மேலூரில் கர்னல் பென்னி குவிக் பெயரில் பழமையான பஸ் நிலையம் இருந்தது. போக்குவரத்துக்கு ஏற்ப இடவசதி இல்லாமல் இருந்துவந்த அந்த பழமையான பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதியுடன் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

Similar News

News March 6, 2026

BREAKING மதுரைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்.7) நண்பகல் 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தனியார் விடுதியில் தங்குகிறார். அதன்பின் மாலை 5.20 மணிக்கு திருமங்கலம் ராயபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை 6 மணிக்கு சென்னை செல்கிறார்.

News March 6, 2026

மதுரை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

மதுரை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

மதுரை: அகில இந்திய அளவில் சாதனை படைத்த மாணவி

image

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச்.6) வெளியாகியுள்ளன. இதில் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடத்தையும், ஆகாஷ் துல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜேஸ்வரி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்வர் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!