News August 25, 2024
அன்னவாசலில் தவித்த நட்சத்திர ஆமை

அன்னவாசல் சாலையில் இன்று நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளின் சப்தத்தை கேட்டு சாலையின் நடுவே நின்றுவிட்டது. அந்த ஆமை அவ்வழியாக வரும் வேறு வாகனங்கள் அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த அபிபுல்லா என்பவர் குச்சியின் உதவியுடன் சாலை கடக்க உதவினார். மேலும் ஆமையை அவ்வழியாக சென்றவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
Similar News
News March 14, 2026
புதுக்கோட்டை: கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கடந்த 2014ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் சகோதரிகள் சரஸ்வதி, வல்லியம்மை ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!