News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News October 29, 2025
தகதகவென மின்னும் மாளவிகா

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தொடர்ச்சியாக இன்ஸ்டாவில், போட்டோஸை பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில், மாளவிகா, பொன்னொளியில் மலர்ந்த முகத்துடன், உயிர் பெற்ற ஓவியமாக, பிரகாசமாக ஒளிர்கிறார். உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News October 29, 2025
EPS தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், EPS தலைமையில், பூத் கமிட்டி அமைக்க நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், வரும் நவ.2-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 28, 2025
உணவு வீணடிக்கும் நாடுகளில் இந்தியா எந்த இடம்?

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் (UNEP) அமைப்பின்படி, உணவுகள் அதிகளவில் வீணடிக்கப்படும் நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சராசரியாக ஆண்டுக்கு எந்தெந்த நாடுகளில், எவ்வளவு உணவுகள் வீணாகிறது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உணவு வீணாவதை தவிர்க்க என்ன செய்யலாம்? உங்கள் ஐடியாவை கமெண்ட்ல சொல்லுங்க.


