News August 24, 2024
ரயிலில் வந்த நெல் மூட்டைகள்

ஈரோடு மாவட்ட பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு மாயவரத்தில் சாகுபடி செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள் வந்தடைந்தன. அவற்றை ஈரோட்டில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன அவற்றைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட உள்ளது.
Similar News
News November 2, 2025
ஈரோடு: தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

ஈரோடு ராசாம்பாளையம் தென்றல்நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த இவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். திருமணம் ஆகாத விரக்தியிலும், கடன் சுமையாலும் அவதிப்பட்டு வந்த சதீஷ்குமார் வீட்டில் இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
சத்தியமங்கலம் அருகே சோகம்

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில் 45-வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
SCAM ALERT: ஈரோடு மக்களே உஷார்!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று வெளியான படத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி போன்ற உங்கள் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


