News August 24, 2024
UPS ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள்

<<13934004>>UPS<<>> ஓய்வூதிய திட்டத்தின் கீழ், கடைசி 12 மாத பேசிக் சம்பளத்தில் 50% பணம் உறுதியாக ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு அந்த அரசு ஊழியர் 25 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். ஒரு வேளை அவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு 60% பணம் ஓய்வூதியமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு உறுதியாக மாதம் ₹10,000 வழங்கப்படும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18%ஆக உயர்த்தப்படும்.
Similar News
News December 26, 2025
சந்தாலி மொழியில் அரசியலமைப்பு வெளியானது

சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதனை வெளியிடுவதில் பெருமைக்கொள்வதாக கூறிய அவர், இது அந்த மொழியை பேசும் சமூகத்தினருக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்துள்ளார். இம்மொழியை, ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
News December 26, 2025
தேர்தல் வந்தாலே ‘ICE’-ஐ ஏவும் பாஜக: கனிமொழி

தேர்தல் நெருங்கும்போது ICE ( IT, CBI, ED) அமைப்புகளை களமிறக்குவதை பாஜக வழக்கமான தேர்தல் வியூகமாக வைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். TOI-க்கு அளித்த பேட்டியில், பாஜகவின் B டீமாக அதிமுக செயல்படுவதாகவும், அக்கட்சியின் கடைசி ஆண்டாக இந்தாண்டு இருக்காது என நம்புவதாகவும் அவர் கூறினார். திமுகவுக்கு எதிரான விஜய்யின் பேச்சுக்கள் பாஜகவின் தூண்டுதலாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 26, 2025
₹5-க்கு ஸ்பெஷல் மினி மீல்ஸ்

மறைந்த Ex PM வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 45 இடங்களில் மலிவு விலை அடல் கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. ₹5-க்கு 2 சப்பாத்தி, சாதம், பருப்பு குழம்பு, கூட்டு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேரின் பசி போக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. TN-ல் அம்மா உணவகம், AP-ல் அண்ணா கேன்டீன், தெலங்கானாவில் இந்திராம்மா கேன்டீன் போல டெல்லியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


