News August 24, 2024
எழுத்திலும் அமைச்சர் எ.வ.வேலு சாதித்துள்ளார்: உதயநிதி

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், ரஜினிகாந்த் அதனை பெற்றுக் கொண்டார். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி, எதிலும் வல்லவர் மட்டும் அல்ல, எழுத்திலும் வல்லவர் என்பதை எ.வ.வேலு நிரூபித்துள்ளதாக பாராட்டினார். கருணாநிதியை, ஒரு தாயுடன் ஒப்பிட்டு வெளியான முதல் நூல் இதுதான் எனவும், இது படிப்பவர்களின் வாழ்வில் நிச்சயம் தாக்கம் ஏற்படும் என்றார்.
Similar News
News March 4, 2026
விஜய்யின் மேடை பேச்சு வெறும் பெர்ஃபாமன்ஸ்: ரவிக்குமார் MP

விஜய்க்கு அரசியல் களத்திற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என ரவிக்குமார் MP விமர்சித்துள்ளார். மேலும், மேடையில் அவர் பேசுவதெல்லாம் வெறும் பெர்ஃபாமன்ஸ் என்றும், ஆனால் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் அவரை பின் தொடர்வது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தவெக படுதோல்வியை சந்தித்த பின், விஜய்யின் மாயை விலகிவிடும் எனவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,120 குறைந்து ₹1,21,600-க்கும், கிராமுக்கு ₹265 குறைந்து ₹15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 4, 2026
ராஜ்யசபா MP யார்? EPS இன்று முடிவு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் EPS இன்று ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்று முடிவு எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய வாக்குறுதிகள், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, தேர்தல் பணிகள், நலத்திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.


