News August 24, 2024

UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

image

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் NPS, UPS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

Similar News

News January 11, 2026

திருவள்ளூரில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

பள்ளி மாணவிக்கு குழந்தை.. 15 பேர் சிக்கினர்

image

திருச்சியில் 6 ஆண்டுகளாக உறவினர்களால் 16 வயது சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார். முதல்முதலாக 2021-ல் 6-ம் வகுப்பு படிக்கும்போது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதன்பின் தாத்தா, தாய்மாமா, அத்தை மகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவுப்படி, 15 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

News January 11, 2026

யாருக்கு ‘25’ மாஸாக அமைந்தது?

image

சிவகார்த்திகேயனின் 25-வது படமாக ‘பராசக்தி’ ரிலீஸாகியுள்ளது. ஒவ்வொரு நடிகருக்கும் தங்களது 25, 50, 75, 100-வது படங்கள் கரியரில் மைல்கல்லாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். சிலருக்கு அது பாறையாக இறுகும், சிலருக்கு மெழுகாக உருகும். அப்படி முன்னணி தமிழ் நடிகர்களின் 25-வது படங்களை மேலே swipe செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த படம் எது? யாருக்கு சரியாக அமைந்தது என்று கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!