News August 24, 2024
மதுரை – சண்டிகர் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

மதுரையில் இருந்து சண்டிகர் வரை இயக்கப்படும், (12688 ) “சண்டிகர் – மதுரை விரைவு ரயில்”, ஆகஸ்ட் 30, செப் 2, 6, 9, 13,16 ஆகிய தேதிகளில், சண்டிகரில் இருந்து மீரட் சிட்டி வழியாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செல்லும் காசியாபாத், டெல்லி நிஜாமுதீன், பரிதாபாத் மற்றும் அசோட்டி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயங்காது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 17, 2025
மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேயர் உமாவின் கணவர் பொன் வசந்த் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ஆக.12ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
ஜாமீன் கோரி அவர் உடல்நிலை மோசம் மற்றும் வழக்கில் தனது பெயர் காரணமின்றி சேர்க்கப்பட்டதாக வாதிட்டார். வெளிவந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்பதால் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
News September 16, 2025
மதுரை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க<
News September 16, 2025
மதுரையில் சும்மா கிடக்கும் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட அரங்கம்

அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் வருமானத்திற்கு வழியின்றி பராமரிப்பது சிரமமாக உள்ளது. வாகன வசதியுள்ளோர் மட்டும் சனி, ஞாயிறுகளில் ஜல்லிக்கட்டு அரங்கு வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் காற்றாடுகிறது. இதற்கு பார்வையாளர் கட்டணமும் நிர்ணயிக்கவில்லை. பூட்டிக் கிடக்கும் கூட்ட அரங்குகளை வாடகைக்கு விடும் திட்டமும் முழுமையாக செயல்படவில்லை.