News August 24, 2024

குன்னத்தில் விழா மேடை திறந்து வைத்த அமைச்சர்

image

குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, ஒகளூர் ஊராட்சி, காந்தி நகரில், ரூ.3-லட்சம், மதிப்பிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பாக கட்டப்பட்டுள்ள விழா மேடையினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (24.08.2024) திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News

News November 6, 2025

பெரம்பலூர்: புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று (நவ.05) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பணியிட மாறுதலில் பெரம்பலூரின் புதிய முதன்மைக் கல்வி அலுவராக சுவாமி முத்தழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி பதவி உயர்வில் திருவண்ணாமலை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 6, 2025

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (நவ.05) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 13 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

News November 6, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!