News August 24, 2024
நாகையில் எஸ்.பி ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ரோந்து பணிக்காக காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் ஆய்வு செய்தார். பின்பு காவலர்கள் முறையாக வாகனங்களைப் பராமரிக்க அறிவுரை கூறினார்.
Similar News
News March 4, 2026
நாகை: NDA கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அமமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
News March 4, 2026
நாகை: மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை செல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நாகை, திருமருகல், சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாபட்டினம், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
நாகை: தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக பணியமர்த்தப்பட உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம், மதிப்பூதியம் இவர்களுக்கு வழங்கப்படும். முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலரை அணுக நாகை ஆட்சியர் தெரிவித்தார்.


